tamilnadu

img

இமாச்சல் ஆளுநராக தத்தாத்ரேயா பதவியேற்பு

சிம்லா, செப்.11- கேரளா, தெலுங்கானா உள்பட 5 மாநிலங்க ளுக்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தார். அவ்வகையில், இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட பண்டாரு தத்தாத்ரேயா புதனன்று பதவியேற்றுக் கொண்டார். அம்மாநில தலை நகர் சிம்லாவில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற விழா வில் இமாச்சலப்பிரதேசம் உயர்நீதிமன்ற நீதிபதி தரம்சந்த்  சவுத்ரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் ஜெய்ராம் தாக்குர் மற்றும் மற்ற அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர்.